தென்காசி : தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற (08). வயது சிறுமி மீது அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் மோதியது.இதில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி (24.07.2026) அன்று சிறுமி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஆலங்குளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சரக்கு வாகனத்தை (17). வயது சிறுவன் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,S. அசோக் குமார், உத்தரவின்பேரில், விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வாகனத்தை இயக்கிய சிறுவனையும், வாகனத்தை இயக்க அனுமதித்த உரிமையாளரான கள்ளம்புளியைச் சேர்ந்த கணேசன் (29). என்பவரும் கைது செய்யப்பட்டனர். மேலும்(18). வயது நிறைவடையாத சிறுவர்களை எந்த வாகனத்தையும் இயக்க அனுமதிக்கக் கூடாது எனவும் அவ்வாறு அனுமதிக்கும் பெற்றோர் மற்றும் வாகன உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















