தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் நடைபெற இருக்கும் ஆடி தபசு திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர், முனைவர், இரா. திருநாவுக்கரசு இ.கா.ப., ஆய்வு மேற்கொண்டார்.
அதில் வெளியூர் செல்லும் பிற வாகனங்கள் எந்த ஒரு போக்குவரத்து நெருக்கடி இல்லாமல் பயணம் செய்ய போக்குவரத்து காவலர்களை நியமிக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பாக வந்து செல்லும் விதமாகவும், கூட்டத்தை கட்டுபடுத்த பேரிகேட்கள் அமைத்து, கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பொதுமக்கள் போல் சாதாரண உடை அணிந்து கண்காணிக்கவும் ஒலிபெருக்கியின் மூலம் தொடர்ந்து திருட்டு சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிட்டார். பாதுகாப்பு பணியில் சுமார் 600க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட உள்ளதாக தெரியப்படுகிறது. ஆய்வின் போது தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், அசோக்குமார் மற்றும் காவல் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















