தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து தீவிரமாக நடவடிக்கை எடுத்து வரும் தென்காசி மாவட்ட காவல்துறை தற்போது பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கீழ்கண்ட QR குறியீடு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதை ஸ்கேன் செய்தால் காவல்துறையின் அவசர உதவி எண் தீயணைப்புத்துறை மருத்துவமனை அருகில் உள்ள கார் பார்க்கிங் மற்றும் முக்கிய சுற்றுலாத் தலங்களின் தகவல்கள் கிடைக்கும். பொதுமக்கள் அவசர தொடர்புக்கு இதை பயன்படுத்தி கொள்ளுமாறு தென்காசி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















