மதுரை: மதுரை மாநகரில் இருசக்கர வாகனங்களில் ‘வீலி’ சாகசம் செய்து, அதன் வீடியோக்களை சமூக வலைதளங்களில் ரீல்ஸாக பதிவிட்ட 6 பேர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். தல்லாகுளம் மற்றும் நத்தம் மேம்பாலம் பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறி ஆபத்தான முறையில் வாகனங்களை இயக்கிய 6 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் ரூ.14 ஆயிரம் அபராதம் வசூலித்ததுடன், சாகசத்திற்குப் பயன்படுத்தப்பட்ட 6 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்குவோர் மீது இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மதுரை மாநகர போலீசார் எச்சரித்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















