மதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முகமது கனி (19). ஆகாஷ் (20). ஆகிய இருவரை மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் இன்று (13.07.2026) குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்களது அசையும் மற்றும் அசையா சொத்துகளும் முடக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். போதைப் பொருட்கள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் 91760 79100 என்ற ரகசிய உதவி எண்ணில் தெரிவிக்கலாம் என்றும், தகவல் அளிப்போரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















