சிவகங்கை: காரைக்குடியில் லிப்ட் கொடுத்த நபரை தாக்கி ரூ.2,100 ரொக்கப் பணம் மற்றும் செல்போனை பறித்த வழக்கில் இரு குற்றவாளிகளுக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து காரைக்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த (31.03.2026) அன்று மணிகண்டன் என்பவரை தாக்கி வழிப்பறி செய்த வழக்கில், CDR பகுப்பாய்வு மற்றும் டவர் லொகேஷன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட விக்னேஷ் @ குட்டி விக்கி மற்றும் செல்வக்குமார் மீது போலீசார் விரைவாக விசாரணை நடத்தி, e-Sakshya நடைமுறைகள், அடையாள அணிவகுப்பு, செல்போன் மற்றும் வீடியோ ஆதாரங்களை சேகரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதையடுத்து, (13.07.2026) அன்று நீதிமன்றம் இருவரையும் குற்றவாளிகளாக அறிவித்து தண்டனை விதித்தது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















