சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்த நந்தகோபால் என்பவரின் மகன் சீமைராஜா என்பவர் (05.07.2026)-ம் தேதி அதிகாலை தனது நண்பரான இராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்த சூர்யா என்பவருடன் இருசக்கர வாகனத்தில் இன்னும் திறக்கப்படாத திருப்பத்தூர் முதல் மேலூர் செல்லும் நான்கு வழிச்சாலையில் வந்தபோது, நிலைதடுமாறி சாலையின் தடுப்புச்சுவரில் மோதியுள்ளனர். இந்த விபத்தில் வாகனத்தை ஓட்டிய சீமைராஜாவுக்கு தலைக்காயம் ஏற்பட்டும் மற்றும் சூர்யாவுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களை அவ்வழியே சென்றவர்கள் 108 அவரச ஊர்திக்கு தகவல் தெரிவித்து, காயம் அடைந்த இருவரையும் உடனடியாக மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சீமைராஜா வரும் வழியில் இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
பின்பு சூர்யாவிற்கு ஏற்பட்ட காயத்திற்கு மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். சீமைராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பத்தினை முழுமையாக அறியாமல் சீமைராஜாவின் உறவினர்கள், சீமைராஜாவின் இறப்பிற்கு காவல்துறையினரால் காரணம் என கூறி மதுரை அரசு இராசாசி மருத்துவமனை அருகில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். பின்பு காவல் துறையினர் நடந்த சம்பவம் குறித்து அவர்களுக்கு தெளிவாக எடுத்து கூறியும், நடந்த சம்பவத்தில் காயம் அடைந்த சூர்யாவை, சீமைராஜாவின் உறவினர்கள் விசாரித்தும், சம்பவமானது வாகன விபத்து என்று தெரிந்து கொண்டு வாகன விபத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டி மனு அளித்து சென்றுள்ளனர். இது சம்மந்தமாக மேலூர் காவல் நிலையத்தில் வாகன விபத்து பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















