சிவகங்கை : தமிழ்நாட்டின் முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி, தென் மண்டல காவல்துறை தலைவர் விஜேந்திர பிதாரி, ஐபிஎஸ், ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் மணிவண்ணன், ஐபிஎஸ் ஆகியோரின் வழிகாட்டுதலிலும், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், ஐபிஎஸ் ஆலோசனையின்படியும், காரைக்குடி உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் புனியா, ஐபிஎஸ் மேற்பார்வையில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, காரைக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செஞ்சை நடராஜ் தியேட்டர் அருகே, காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில், சார்பு ஆய்வாளர் சபிதா ஸ்ரீ, சிறப்பு சார்பு ஆய்வாளர் அன்னக்கிளி மற்றும் காவல்துறையினர் துப்பாக்கி ஏந்தி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சட்டம்-ஒழுங்கை பேணுதல், குற்றச் செயல்களைத் தடுப்பது மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த வாகனச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















