திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் காவல் ஆய்வாளர்களுக்கான E-சம்மன் நடைமுறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், E-சம்மன் நடைமுறையை விரைவாகவும் திறம்படவும் செயல்படுத்துவது, சம்மன்களை உரிய முறையில் வழங்குவது மற்றும் நீதிமன்ற நடைமுறைகளில் ஏற்படும் தாமதங்களை தவிர்ப்பது குறித்து காவல் ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார். மேலும், E-சம்மன் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















