திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், கிறிஸ்டி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மூன்றடைப்பு – பாக்கியநாதபுரம் சாலையில், பயன்பாடற்ற கட்டிடம் ஒன்றின் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் இருசக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்த தூத்துக்குடி மாவட்டம், சடையன் கிணறு பகுதியை சேர்ந்த பவுல் (43). மற்றும் மருதகுளம் பகுதியை சேர்ந்த பாரத் மோசஸ் அரங்கோவன் (55). ஆகிய இருவரையும் சோதனை செய்து பார்த்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இது குறித்து, மூன்றடைப்பு காவல் உதவி ஆய்வாளர், முருகேஷ் வழக்கு பதிவு செய்து பவுல் (43). மற்றும் பாரத் மோசஸ் அரங்கோவன் (55). ஆகிய இருவரையும் கைது செய்து. அவர்களிடமிருந்து சுமார் 29 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும்பறிமுதல் செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















