மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கால்நடை மருத்துவமனை அருகே இன்று காலை அடையாளம் தெரியாத பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். தகவலின் பேரில் வாடிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில், பூச்சிமருந்து (விஷம்) அருந்தியதால் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில், அவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் மதுரை மாவட்ட காவல்துறைக்கு தெரிவிக்குமாறு போலீசார் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















