மதுரை: மதுரை மாவட்ட பொது குறைதீர்ப்பு தினம் தமிழக அரசு உத்தரவுப்படி மதுரை மாவட்டத்தில் (15.07.2026) மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் அனைத்து உட்கோட்டங்களிலும் பொது மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. மேலும் மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரணை நடத்தினார். இதேபோல், மாவட்டத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று விசாரணை நடத்தினர். மாவட்டம் முழுவதும் மனுக்கள் பெறப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது மிக விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















