கோவை: கோவை மாவட்ட ஊர்க்காவல் படையில் சேவையாற்றிய ஜவான் திரு. V. ஸ்ரீநாத் (வயது 27). 2 ஜனவரி 2025ல் எதிர்பாராத சாலை விபத்தில் மரணம் அடைந்தார். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் பேரில், தமிழக காவல்துறை தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில், தமிழக காவல் துறையின் ஊர்க்காவல் படை சேமநல நிதியிலிருந்து ரூபாய் 1,00,000 கோவை மாவட்ட ஊர்க்காவல் படை ஏரியா கமாண்டர் திரு. S. சண்முகம் அவர்கள் முன்னிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. பவன்குமார் IPS அவர்கள், ஸ்ரீநாத் மனைவியிடம் வழங்கினார்கள். இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஊர்க்காவல் படையின் படைத்தளபதி முனைவர்.M.ஜெய்குமார், கோவை மாவட்ட ஆயுதப்படை காவல் சார்பு ஆய்வாளர் உமாராணி, தலைமைக் காவலர் தீபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















