திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் உட்கோட்டம், ஆம்பூர் நகர காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் , ஆம்பூர் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர், இன்று (08.07.2026) ஆம்பூர் டெல்டா ஷூ கம்பெனி பின்புறம், மொட்டு கொல்லை பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அச்சோதனையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த உமேஷ் குமார் சிங் (36) என்பவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிறப்பாக செயல்பட்டு கஞ்சாவை பறிமுதல் செய்து குற்றவாளியை கைது செய்த ஆம்பூர் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பாலமுருகன் மற்றும் காவல்துறையினரின் பணியை, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்கள் பாராட்டினார். போதைப்பொருள் தொடர்பான தகவல்கள் தெரிந்தால், பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும்.




















