திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை குழுவுடன் இணைந்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை அடையாளம் காணும் முறைகள், அவசர காலங்களில் உதவி பெறும் வழிமுறைகள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், சமூக வலைத்தளங்களின் பாதுகாப்பான பயன்பாடு, இணையவழி குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்வது மற்றும் குழந்தைகள் உதவி எண்கள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது சந்தேகங்களுக்கு விளக்கங்களை பெற்றுக்கொண்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



















