கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது ராமன் தொட்டி கேட்டில் உள்ள குற்றவாளி வீட்டின் பின்புறம் சட்ட விரோதமாக வெளிமாநில மதுபானங்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்தபோது சட்ட விரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வெளிமாநில மதுபானங்கள் இருந்தது. மதுபானங்கள் விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து வெளிமாநில மதுபானங்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.




















