திண்டுக்கல்: திண்டுக்கல், மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த கருப்பையா மற்றும் அவரது மனைவி வசந்தி இருவரும் இருசக்கர வாகனத்தில் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வையம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது ஐஸ்கிரீம் லோடு ஏற்றி கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவர் கருப்பையா காயங்களுடன் உயிர் தப்பினார். போலீசார் சரக்கு வேன் டிரைவர் ஜம்ஷீரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















