விருதுநகர்: சிவகாசியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 10 சவரன் தாலிச் செயினை பறித்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இருவருக்கும் சிவகாசி குற்றவியல் நடுவர் மன்றம் (எண்-1) தண்டனை விதித்துள்ளது. வழக்கின் முதல் குற்றவாளிக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 2-வது குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும், இருவருக்கும் சேர்த்து ரூ.3,78,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை சிவகாசி குற்றவியல் நடுவர் மன்றம் (எண்-1) வழங்கியுள்ளது.



















