திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்தில் Court Case Monitoring System (CCMS) தொடர்பான சிறப்பு பயிற்சி வகுப்பு காவல் அதிகாரிகள் மற்றும் காவல் பணியாளர்களுக்காக நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பில் ஆவடி காவல் ஆணையர் அவர்கள் கலந்துகொண்டு, CCMS செயலியின் பயன்பாடு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார். மேலும், நீதிமன்ற வழக்குகளின் நிகழ்நேர (Real-time) தகவல்களை எளிதாக அறிந்து, வழக்குகளின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணித்து, பணிச்சுமையை குறைத்து, நீதிமன்ற நடவடிக்கைகளை திறம்பட கையாளும் வகையில் செயல்பட காவல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
பயிற்சியின்போது, CCMS செயலியின் பல்வேறு அம்சங்கள், வழக்குகளின் தகவல்களை பதிவேற்றம் செய்தல், கண்காணித்தல் மற்றும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நடைமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதில் பங்கேற்ற காவல் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு




















