மதுரை: மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா,
மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், ஆகியோர் ,
மதுரை மாவட்டம் தமுக்கம் மைதானம் அருகில், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027-ஐ முன்னிட்டு சுமார் 300 பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
முன்னதாக”மக்கள் தொகை கணக்கெடுப்பில் நான் சுய கணக்கெடுப்பை மேற்கொள்வேன் – என் பங்கேற்பு, என் பொறுப்பு, என் கணக்கெடுப்பு” என்ற கருத்தை பொது மக்களிடையே வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கையெழுத்திட்டு துவக்கி வைத்தனர்.
உதவி ஆட்சியர் (பயிற்சி) சித்தார்த் போகர்னா,
உடன் உள்ளார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















