இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (01.07.2026) அன்று நடைபெற்ற சிறப்பு பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ், ஐ.பி.எஸ்., பொதுமக்களிடமிருந்து புகார் மனுக்களை நேரடியாக பெற்றுக் கொண்டார். முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு, உரிய சட்ட நடவடிக்கைகள் மூலம் விரைந்து தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டு, விரைவான தீர்வை வழங்கும் நோக்கில் இந்த சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இராமநாதபுரத்தில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி




















