நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மொளசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினரால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது தொடர்பாகவும், பொதுமக்களுக்கு போதைப்பொருட்களின் தீமைகள் மற்றும் அதனால் ஏற்படும் சமூக, உடல்நல பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.




















