நாமக்கல்: நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர நடை ரோந்து பணியில் ஈடுபட்டனர். நடை ரோந்தின் போது சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு, அவற்றின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும், பொதுமக்களிடம் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
குறிப்பாக, இரவு நேரங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், அந்நிய நபர்களிடம் தனிப்பட்ட தகவல்களை பகிரக்கூடாது, சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் தென்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை அதிகரிப்பதுடன், குற்றத் தடுப்பு பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.




















