தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்துள்ளனர். தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அருளப்பன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் (36). என்பவர் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ராம்குமாரை கைது செய்து, அவரிடமிருந்து விற்பனை நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் செல்போனை பறிமுதல் செய்தனர். சட்டவிரோத லாட்டரி விற்பனையை தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




















