தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கஞ்சா தொடர்பான பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இருவரை, தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (குண்டர் சட்டம்) கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (23). மற்றும் முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த கண்ணன் (23). ஆவர். இவர்கள் மீது தொடர்ச்சியாக கஞ்சா வழக்குகள் பதிவாகி இருந்த நிலையில், பொதுமக்களின் அமைதி மற்றும் பொது ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில், தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் இருவரையும் (22.07.2026) அன்று கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர். இந்த நடவடிக்கை போதைப்பொருள் குற்றங்களை கட்டுப்படுத்தும் காவல்துறையின் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும்.




















