திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் (01.07.2026) வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 44 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட அனைத்து மனுக்களும் உரிய முறையில் விசாரணை செய்யப்பட்டு, சட்டப்படி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டு, விரைவாக தீர்வு காணும் நோக்கில் காவல்துறை சார்பில் வாரந்தோறும் இந்த குறைதீர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.




















