கிருஷ்ணகிரி: உலக போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு (25.06.2026) கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ்குமார், இ.ஆ.ப., மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. அனிதா ஆகியோர் இணைந்து, மாணவ, மாணவியர்களிடையே போதைப்பொருள் தடுப்பு மற்றும் அதன் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அப்போது, இளைஞர்கள் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து முற்றிலும் விலகி, கல்வி, ஒழுக்கம் மற்றும் நற்பண்புகளில் கவனம் செலுத்தி, நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















