இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் நீண்டகாலமாக சிறப்பாக பணியாற்றி, 2026 ஜூன் 30-ஆம் தேதியுடன் பணி நிறைவு பெறும் காவல்துறையினரை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜி. சந்தீஷ், ஐபிஎஸ், நேரில் பாராட்டி கவுரவித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல்துறையில் அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் பணியாற்றி ஓய்வு பெறும் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அப்போது, அவர்கள் காவல்துறையில் ஆற்றிய அர்ப்பணிப்பான சேவையை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பணி நிறைவுக்குப் பிறகும் நல்ல உடல்நலத்துடன், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகளைத் தெரிவித்தார். நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு, பணி நிறைவு பெறும் பணியாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.




















