திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவம் நடந்தது. இதையடுத்து எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில், டிஎஸ்பி கார்த்திக் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையில் எஸ்.ஜ.காதர்மைதீன், குற்றத்தடுப்பு பிரிவு எஸ் எஸ் ஐ ஜார்ஜ்,போலீசார் ராதா, முகமது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட திண்டுக்கல்லை சேர்ந்த சதாம்உசேன்(24). அப்துல்சமது(38).முகமதுபிலால்(39). கணவாய் இப்ராகிம்(29). ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















