கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி G.S. அனிதா அவர்களின் உத்தரவின்பேரில், கிருஷ்ணகிரி உட்கோட்டத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும், காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் (11.07.2026) காலை 11.00 மணி முதல் பகல் 01.00 மணி வரை பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் நடைபெற்றது.
இந்நிகழ்வில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மற்றும் புகார்கள் நேரடியாகப் பெறப்பட்டு, அவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, விரைவான மற்றும் திறம்படமான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















