மதுரை: மதுரை மாவட்டத்தில் சிலர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தலில் ஈடுபடுவதாக மதுரை மாவட்ட காவல்துறையின் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு பிரிவினருக்கு (Anti Narcotic Task Force) ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், (08.08.2026) அன்று இரவு, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தேவநாதன் அவர்களின் உத்தரவின் பேரில், போதைப்பொருள் தடுப்பு சிறப்பு பிரிவினர் திண்டுக்கல் to மதுரை நான்கு வழிச்சாலையில் உள்ள பாண்டியராஜபுரம் சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு, TN 47 BB 8354 Mahindra Mini Van என்ற லோடுவேனை மறித்து சோதனையிட்ட போது, கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து மதுரைக்கு மேற்படி வாகனத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போதைப்பொருள் கடத்தி வந்தது தெரியவந்தது.
மேற்படி சட்ட விரோத கடத்தலில் ஈடுபட்ட, கனகராஜ், (42). த/பெ. வேலுச்சாமி, மன்மங்களம், கரூர் மாவட்டம் மணிவண்ணன், (34). த/பெ. பழனியப்பன், கிருஷ்ணராயபுரம், கரூர் மாவட்டம் ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 65 மூடைகளில் சுமார் 700 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பாக வாடிப்பட்டி காவல் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்புச் சட்டம் (Tobacco Act) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்படி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தலில் ஈடுபட்ட இருவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இனி வரும் காலங்களில் இது போன்று வெளி மாநிலங்களிலிருந்து சட்டவிரோதமாக கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரித்து உள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்



















