கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி அனிதா அவர்கள், பர்கூர் பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினருடன் இணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள், அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள், சட்ட ரீதியான பாதுகாப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக காவல்துறையை அணுக வேண்டிய அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படையினரின் பணிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் சமூகத்தில் பாதுகாப்பு உணர்வை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளக்கமளித்தார். அத்துடன், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், இணையவழி மோசடிகள் குறித்து எச்சரிக்கை, பொதுமக்களின் விழிப்புணர்வின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டது. பொதுமக்களிடையே பாதுகாப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் காவல்துறையினர் தொடர்ந்து இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















