திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனித் தேரோட்டம் (28.06.2026) அன்று நடைபெற்றது. பாதுகாப்பு பணியில் சுமார் 1,200க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டனர். பக்தர்கள் கூடும் இடங்கள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. இந்நிலையில் தேரோட்டத்தின் போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி பக்தர்களிடம் பணப்பை, கைப்பேசி உள்ளிட்டவற்றை திருட முயன்ற பெண் உள்பட 6 பேரை மாநகர காவல்துறையினர் கைது செய்து அவா்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே போல தேரோட்டத்தின் போது பக்தர்கள் தவறவிட்ட பொருள்கள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக திருநெல்வேலி மாநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















