மதுரை: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், போதை பொருளை தடுக்கவும் மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் இன்று (04.07.2026)-ம் தேதி மாவட்டம் முழுவதும் போதை பொருள் தடுப்பு தீவிர சிறப்பு வேட்டை (Special Drive) நடத்தப்பட்டது. இந்த போதை பொருள் தடுப்பு தீவிர சோதனையில், மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் ஆகியோர், போதை பொருள் தடுப்பு தீவிர சிறப்பு வேட்டையில் ஈடுபட்டு 10 நபர்களை கைது செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 6½ கிலோ கஞ்சா மற்றும் 24 போதை மாத்திரைகள் கைப்பற்றபட்டுள்ளது.
மேலும் குட்கா விற்பனை செய்ததற்காக 3 நபர்களை கைது செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 12½ கிலோ குட்கா கைப்பற்றி கைது செய்யப்பட்டு, உரிய சட்ட நடைமுறைகளுக்குப் பின் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். ”போதை பொருள்களை விற்பனை செய்பவர்களையும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது இத்தகைய கடுமையான அதிரடி நடவடிக்கைகள் தொடரும்” என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

திரு.விஜயராஜ்




















