மதுரை: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் நேற்று (02.07.2026) அன்று மாவட்டம் முழுவதும் அதிரடி தீவிர சிறப்பு வேட்டை (Storming Operation) நடத்தப்பட்டது. இந்த அதிரடி சோதனையில், மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் ஆகியோர், மதுரை மாவட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளை தணிக்கை செய்து, அதில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய மற்றும் கொடூர ஆயுதங்கள் வைத்திருந்த சுமார் 22 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டு, உரிய சட்ட நடைமுறைகளுக்குப் பின் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
”பொதுமக்களின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது இத்தகைய கடுமையான அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















