சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் பிரபல செட்டிநாடு பகுதியான காரைக்குடி தாபா கார்டனில், தமிழ்நாடு மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கம் சார்பாக பணி நிறைவு பெற்ற உணவு பாதுகாப்பு அலுவலர் தியாகராஜன் அவர்களை கௌரவிக்கும் பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சி, மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் டாக்டர் விஜயகுமார் (எம்.பி.பி.எஸ்) அவர்கள் தலைமையில் நடைபெற்றது.சாகோட்டை ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலராக பணியாற்றிய தியாகராஜன் அவர்கள், தனது நீண்டகால சேவை, நேர்மை மற்றும் பொதுமக்கள் நலனில் செய்த பணிக்காக நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டார்.நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு, அவரின் பணித்திறன் மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டினர். மேலும், நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார். நிகழ்ச்சியில் பேசியவர்கள், பணி நிறைவுக்குப் பிந்தைய வாழ்க்கையில் ஆரோக்கியமும் வளமையும் பெற வாழ்த்துகள் தெரிவித்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி



















