தஞ்சாவூர்: தஞ்சாவூர் கீழ ராஜ வீதியில் பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்ட இருவரை, தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தடுத்து கைது செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பந்தம் அவர்களின் வீர செயல் பாராட்டுக்குரியதாக அமைந்தது. பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த சம்பவத்தில், எஸ்.எஸ்.ஐ சம்பந்தம் தனியாக செயல்பட்டு கத்தியை பறிமுதல் செய்து, நிலைமையை கட்டுப்படுத்தினார். இந்த தைரியமான மற்றும் துரிதமான நடவடிக்கையை பாராட்டி, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் A. சுந்தரவதனம் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். கடமை உணர்வோடு செயல்பட்ட காவல்துறை அதிகாரியின் இந்த செயல் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா



















