தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதியாக நிலைநிறுத்தும் வகையில் காவல்துறை துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு பல்வேறு குற்றச்சம்பவங்களை விரைவாக களைந்துள்ளது. கடந்த (08.04.2026) அன்று வல்லம், பாபநாசம் மற்றும் நகர உட்கோட்டங்களில் இடம்பெற்ற தொடர் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, பறிக்கப்பட்ட செல்போன்கள் மீட்கப்பட்டன.
அதேபோல், (09.04.2026) அன்று கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளியாக்ரஹாரத்தில் வயதான மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், 24 மணி நேரத்திற்குள் குற்றவாளி கண்டுபிடித்து கைது செய்யப்பட்டார். மேலும், கிழக்கு மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய எல்லைகளில் இரவு ரோந்து பணியின் போது திருட்டில் ஈடுபட்ட மற்றும் முயன்ற குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, வாகனங்கள் மற்றும் திருடப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இத்தகைய சிறப்பான பணிகளை பாராட்டும் வகையில், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஏ. சுந்தரவதனம், இ.கா.ப., அவர்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை நேரில் அழைத்து பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் வெகுமதிகளை வழங்கினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















