தஞ்சாவூர்: தேர்தல் நாளில் EVM இயந்திரங்களை பாதுகாப்பாக வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் காவல் துறை மொபைல் குழுவினர்களுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஏ. சுந்தரவதனம் அவர்கள் (16.04.2026) தஞ்சாவூர் தீர்க்க சுமங்கலி மஹாலில் கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் தேர்தல் நடைமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும், அனைத்து காவல் பணியாளர்களும் முழு விழிப்புடன் செயல்பட்டு தேர்தல் பணிகள் சீராக நடைபெற உறுதி செய்யுமாறு வலியுறுத்தப்பட்டது.




















