திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி மதுவிலக்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது ஒட்டன்சத்திரத்தை அடுத்த அம்பிளிக்கை அருகே தங்கச்சியம்மாபட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பெரியமண்டவாடியை சேர்ந்த சஞ்சய்(23). தங்கச்சியம்மாபட்டியை சேர்ந்த முனியப்பன்(25) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அம்பிளிக்கை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேற்படி சம்பவம் குறித்து அம்பிளிக்கை போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















