மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின்படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் சார்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ -மாணவியர்கள், பொதுமக்கள் இடையே போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாநகரில் ANTI DRUG CLUB மன்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, (17.07.2026) மதுரை மாநகர் அண்ணா நகர் பகுதியில் உள்ள அம்பிகா பெண்களுக்கான கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மதுவிலக்கு காவல்துறையினர், அண்ணா நகர், அணைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் மற்றும் கலால் துறையினர் இணைந்து போதைப் பொருள்கள் தடுப்பு தொடர்பான ANTI DRUG CLUB மன்றத்தின் 289-வது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் காவல்துறையினர் மற்றும் மாணவ ,மாணவியர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டு. நிகழ்ச்சியின் இறுதியில் அனைவரும் இணைந்து போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















