கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐபிஎஸ் அவர்கள் கடந்த ஜனவரி 26-ஆம் தேதி 173(2) – ‘FIR உங்கள் உரிமை’ திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்ட புகார்தாரர்களுக்கு அவர்களது FIR நகலை இலவசமாக வழங்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 3,165 புகார்தாரர்களுக்கு ஊர்க்காவல் கண்காணிப்பு திட்ட போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மூலம் இலவச FIR நகல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், புகார்தாரர்களின் வீடுகளுக்கே சென்று FIR நகலை வழங்குவதன் மூலம் காவல் நிலையங்களுக்கு தேவையற்ற அலைச்சல் தவிர்க்கப்பட்டுள்ளதுடன், காவல்துறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை பொதுமக்களிடையே அதிகரித்துள்ளதாகவும், இந்த திட்டத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.



















