கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாதுவனப்பள்ளி கிராமத்தில் பிரகாஷ் என்பவர் தன் குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாகவும், இந்நிலையில் கடந்த (09.07.2026) ஆம் தேதி காலை சுமார் 08.00 மணிக்கு பிரகாஷின் அம்மா லக்கம்மா (75). என்பவர் கீழே விழுந்து அடிபட்டு நடக்க முடியாமல் வீட்டில் இருந்து வந்ததாகவும், அந்த சமயத்தில் மூன்று குற்றவாளிகள் வந்து பிரகாஷிடம் தண்ணீர் கேட்டதாகவும், பின்னர் பிரகாஷ் அசந்த நேரத்தில் மூன்று எதிரிகளும் பிரகாஷ் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்து கொண்டு தப்பித்துச் செல்ல முயன்ற போது பிரகாஷின் அம்மா தடுத்து செயினை பிடித்துக் கொண்டதில் பாதிச்செயின் குற்றவாளிகள் எடுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டது தொடர்பாக பாகலூர் காவல் நிலையம் ஆஜராகி பிரகாஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பாகலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை செய்து தங்க செயினை பறித்து சென்ற மூன்று குற்றவாளிகளையும் கைது செய்து, அவர்களிடமிருந்து வாகனங்கள், தங்க நகைகள் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.




















