திண்டுக்கல்: திண்டுக்கல் முத்தழகுபட்டியைச் சேர்ந்த நவீன் ராஜா, சரத்குமார் ஆகிய 2 பேர் மீது கடந்த ஏப்ரல் மாதம் மிரட்டி பணம் பறித்ததாக நகர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இந்த நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்த 2 பேரும் தொடர்ந்து காவல் நிலையத்தில் ஆஜராகி கையொப்பம் இடாததால் பிணை நிபந்தனையை மீறி இருந்தனர். இதையடுத்து நகர் தெற்கு போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.மனுவை பரிசீலித்த நீதிமன்றம் 2 பேரின் பிணையை ரத்து செய்து கைது வாரண்ட் பிறப்பித்தது.இதையடுத்து எஸ்.. ஜெயக்குமார் உத்தரவின் பேரில், டிஎஸ்பி கார்த்திக் மேற்பார்வையில், நகர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையிலான தனிப்படை போலீசார் முத்தழகுபட்டியில் பதுங்கி இருந்த 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















