மதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீது மாவட்ட ஆட்சியர், இன்று (18.07.2026) குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டவர்கள் தமீம் அன்சாரி (19). கார்த்திக் (37). தினேஷ்குமார் @ நரி (25). சித்திக் ராஜா (26). ஆகியோர் ஆவர்.
மேலும், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்களது மற்றும் உறவினர்களின் அசையும், அசையா சொத்துகளும் முடக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். போதைப்பொருள் தொடர்பான தகவல்களை 94981 81206 என்ற எண்ணில் ரகசியமாக தெரிவிக்கலாம் என்றும், தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















