மதுரை: மதுரை புளியங்குளம் அரசு பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம்
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தேவநாதன் அவர்களின் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரக்குமார் அவர்களின் மேற்பார்வையில், இன்று (17.07.2026) சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் மற்றும் மாணவிகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், “குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, குழந்தைகள் பாதுகாப்பு, அவர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு (Drug Awareness)” குறித்த விரிவான விழிப்புணர்வு மாணவ மாணவிகளிடம் வழங்கப்பட்டது.
இதில் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. கமலி அவர்கள் தலைமை தாங்கி விழிப்புணர்வு உரையாற்றினார். மேலும், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் திருமதி. சாந்தி, திருமதி. வாணி, பெண் தலைமை காவலர்கள் திருமதி. மனோதா, திருமதி. சரண்யா மற்றும் சிலைமான் காவல் நிலைய காவலர்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களும் முன்னிலை வகித்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















