தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஏ. சுந்தரவதனம், இ.கா.ப., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான வழக்குகளில் விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நீதிமன்ற விசாரணையை துரிதப்படுத்தி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கொலை, திருட்டு மற்றும் இதர முக்கிய குற்ற வழக்குகளின் விசாரணை முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டன.
சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தொடர்பான வழக்குகளில் விரைந்து நீதிமன்ற தண்டனை பெற்றுத்தர மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. நிலுவையில் உள்ள நீதிமன்ற பிடியாணைகளை விரைந்து நிறைவேற்றுதல், போதைப்பொருள் குற்றங்களை முற்றிலும் ஒழித்தல் மற்றும் குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டன.
மேலும், 2026 ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் வெகுமதிகள் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டி ஊக்குவித்தார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















