கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பகுதியில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல்துறையினர் நடத்திய சோதனையில், ஷாஹீன் கான் (24). என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 0.8 கிராம் அரசால் தடை செய்யப்பட்ட உயர்ரக போதைப்பொருளான எம்.டி.எம்.ஏ. (மெத்தாம்பெட்டமைன்) பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.



















