திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழநி ராமர் கோயில் தெருவில் கிளினிக் நடத்தும் பழநியை சேர்ந்த அனுப்குமார்(51). என்பவர் சித்த மருத்துவம் படித்து நோயாளிகளுக்கு ஆங்கில முறை சிகிச்சை அளித்து வருவதாக புகார்கள் சென்றது. இது குறித்து திண்டுக்கல் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் தலைமையிலான குழுவினர் அவரது கிளினிக்கில் ஆய்வு செய்தனர். அதில் நோயாளிகளுக்கு ஆங்கில மருந்து மாத்திரைகள் வழங்குவது தெரிய வந்ததை தொடர்ந்து பழனி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத்தொடர்ந்து போலீசார் அனுப்குமாரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















