மதுரை: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயாம்பட்டி கிராமத்தில் ஏற்பட்ட மோதலில், பட்டியலின மக்களின் 4 வீடுகளின் ஓடுகள் சேதப்படுத்தப்பட்டதுடன், முதியவர் ஒருவர் தாக்கப்பட்டு காயமடைந்தார். சம்பவம் தொடர்பாக ராமர், லட்சுமண், பிரவீன் ஆகிய 3 பேரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜாதி ரீதியான மோதல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, தேவையெனில் குண்டர் தடுப்புச் சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















